Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் நிலை சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயை இழந்து கதறும் 4 பிள்ளைகள்….!!

உடல்நல பாதிப்பால் மனவேதனை அடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீரகோயில் கோட்டை கிராமத்தை சார்ந்த விவசாயி சரவணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு ஓவியா, தேவிஸ்ரீ திவ்ய தர்ஷன், பிரவேஷ் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் கடந்த 26ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டில் மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே அவரை குடும்பத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் சகுந்தலா பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |