Categories
தேசிய செய்திகள்

100% பார்வையாளர்களுக்கு அனுமதி – மத்திய அரசு அனுமதி…!!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது.

எனவே 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதித்தது. இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வண்ணம் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்ட நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |