Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி 14 தமிழகம் வருகிறார்”….. பிரதமர் மோடி…!!

பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, மெட்ரோ திட்டதை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அதனடிப்படையில் தற்போது பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகைபுரிந்து, வண்ணாரப் பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பார் என்றும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |