டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நேர்ந்தது. இந்த குண்டு வெடிப்பு குறைந்த தீவிரம் கொண்டது என்றும் இதனால் ஒருவர் காயமடைந்ததாகவும் 4 கார்களின் கண்ணாடிகள் மட்டுமே உடைந்ததாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திலிருந்து பாதி எரிந்த நிலையில் துணி மற்றும் பாலித்தீன் பை கிடைத்ததாகவும் அது தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இஸ்ரேலிய தூதரக மீது குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல் காத் தெரிவித்துள்ளார்