சுவிட்சர்லாந்தில் தடுப்பு மருந்து தாமதம் ஆவதால் பொது மக்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் கடந்த வாரம் சுமார் 10 நகரங்களில் கொரோனா ஊரடங்கிற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அது கலவரமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரும் பெடரல் போலீசார் களமிறங்கினர். அதே போன்ற சூழ்நிலை சுவிட்சர்லாந்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பீற்றர் ரெக்லி தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது, சுவிட்சர்லாந்தில் சமூக நல்லிணக்கம் சேதம் அடைந்திருப்பது அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதால் பொதுமக்களுக்கு அரசியல் தலைமை மீது அதிருப்தி ஏற்படும். இதனால் மக்கள் வீதிக்கு வந்தும், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டும் போராடலாம். இதில் சமூக விரோதிகளும் நுழைய வாய்ப்புள்ளது.
தற்போது சுவிசர்லாந்து வன்முறை கலவரங்கள் ஏற்படும் அறிகுறி எதுவும் இல்லை. ஐரோப்பாவில் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தும் வகையில் பதட்டமாக உள்ளது.இருப்பினும் கோரோணா பரவலை நம்பாதவர்கள், தடுப்பூசிக்கு எதிராக செயல்படுபவர்கள் போன்றோர் சுவிச்சர்லாந்தின் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.