Categories
அரசியல் மாநில செய்திகள்

உழவன் மகன் என நடிக்கக் கூடாது!… முதல்வர் ஈபிஎஸ்-ஐ விமர்சித்த வைகோ…!!!

தமிழகத்தில் தேர்தலுக்காக உழவன் மகன் என முதல்வர் நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என முதல்வர் பழனிசாமி வைகோ விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தேர்தலுக்காக உழவன் மகன் என முதல்வர் நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என்று முதல்வர் பழனிசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். உயர்மின் கோபுர பிரச்சனையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |