Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்மாயில் வீதி, பட்டறை மற்றும் அவிநாசி சூளை போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இஸ்மாயில் வீதிப் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |