Categories
தேசிய செய்திகள்

எங்கள் மீது பொய் வழக்கு….செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை….!!

செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தும் போது விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி சென்றதாக விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையை போராடும் விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்கு செல்லவில்லை என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி தலைவர் சத்னம் சிங் பன்னு.

நாங்கள் திட்டமிட்டபடி போலீஸ் கூறிய சாலையில் தான் சென்றோம். பாதை மாறி செல்லவில்லை. மத்திய அரசு தங்களுக்கு சொந்தமான ஆட்களை செங்கோட்டைக்கு வன்முறையில் ஈடுபட வைத்து, வழக்குகளை மட்டும் எங்களுக்கு எதிராக பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |