சசிகலாவிற்கு சர்க்கரை நோய் உச்சத்தை தொட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி உள்ளார். அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறிகுறி அல்லாத கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சசிகலாவுக்கு இதுவரை இல்லாத அளவில் சர்க்கரை நோய் உச்சத்தை எட்டி உள்ளதாகவும், அதற்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.