Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“காலை உணவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!

நம்முடைய இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை உணவுக்குமான நேர இடைவெளி அதிகம். ஏறக்குறைய அது ஒரு விரதத்திற்குச் சமம்.

விரத நாட்களில் விரதம் முடிக்கும் போது ஏதேனும் பானம் அருந்திய பிறகே உணவுகளை உண்பர். அதே போல் இரவு முதல் காலை வரையிலான அந்த விரதத்தை முடிக்க எளிமையான உணவுகளே சிறந்தது.
உங்களது காலை உணவு எளிதில் ஜீரணிக்கப் படக்கூடியதாக இருக்கவேண்டும். கார்போ ஹைடிரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் வாழும் தட்ப, வெப்ப நிலைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.

காலைப் பொழுதில் ஃபாஸ்ட்புட் வகைகள், எண்ணெய் உணவுகள் மற்றும் சோடா வகைகளை உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். கூடுமான வரை இட்லி, கஞ்சி, வேகவைத்த தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ளும் போது நமது உடலின் செரிமானம் நன்றாக இருக்கும். இவை நாள்முழுவதும் உங்களை உற்சாகமாக வைக்க உதவும்.

Categories

Tech |