தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி திமுகவின் முக்கியத் தலைவர் ஒருவருடன் பேசியதாக தகவல் வெளியான நிலையில், திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை வலிமையாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆட்சியை அசைத்துப் பார்க்கும் அளவிற்கு விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.