Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… எவ்வளவு சொல்லியும் திருந்தல… அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா காந்தி தெருவில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது சென்டரின் உரிமையாளர் அங்குள்ள பெண்ணுடன் அவரை விபசாரத்தில் ஈடுபட அழைத்துள்ளார்.

இதனால் வினோத் காம்ப்ளி கே.கே. நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளரான லீலா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கமிஷனர் லோகநாதன் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |