Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் மன்சூரின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் துக்கம் விசாரிக்க மகன் முகமது மற்றும் மகள் பாத்திமா, சகிலா ஆகியோருடன் மன்சூரா காரில் சென்றுள்ளார்.

இந்த காரை சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது காரானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காரவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் கொண்டு சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து விட்டார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த காரானது, லாரியின் பின்பகுதியில் மோதி விட்டது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் இடது புற இருக்கையில் அமர்ந்திருந்த முகமது ஆதம்பாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த அவரது தாயார் மற்றும் சகோதரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த முகமது ஆதம்பாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காயமடைந்த மன்சூரா மற்றும் அவரது இரு மகள்களை நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் அந்த காரை ஓட்டிச் சென்ற கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |