Categories
அரசியல் மாநில செய்திகள்

தனி சின்னத்தில் தான் போட்டி… சரத்குமார் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கை நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்து பேசிய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. அதிமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |