Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறைக்கு பா.ஜ.க.வே காரணம் – மம்தா பானர்ஜி..!!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மேற்கு வங்கம் சட்ட பேரவை கூடியதும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என தெரிவித்தார்.  டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் போலீசார் தவறாக நடந்ததாக கூறிய அவர் விவசாயிகளை தேச விரோதிகளாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், டெல்லி பாரதிய ஜனதா கட்சியை காரணம் என்றும் முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Categories

Tech |