இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. எந்த சிம் கார்டுகளில் இணையதள வேகம் அதிகமாக உள்ளதோ அதை தான் அதிக அளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் 5ஜி 10 எக்ஸ் ஸ்பீடு, 10 எக்ஸ் லேட்டன்சி மற்றும் 100 எக்ஸ் கன்சீலரை வழங்கவல்லது. பார்டர் வாடிக்கையாளர்கள் ஒரு முழு திரைப்படத்தை 5ஜி போனில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த அதிரடி அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.