ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை என அறிவித்துவிட்டதால் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரின் ஆலோசனைப்படி, சில முக்கிய பிரபலங்களுடன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனவே விரைவில் தமிழகத்தில் புதிய கட்சி உதயமாகுவது குறித்து எதிர்பார்க்கப்படுகிறது.