சசிகலா அமலாக்கத்துறை கடிதங்களுக்கு பதிலளிக்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா 4 ஆண்டு சிறை தணடனைக்கு பிறகு நேற்று விடுதலையானார். இதையடுத்து பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையான போது சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் விடுதலை சான்றிதழையும், அமலாக்கத் துறை நோட்டீசையும் வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து சொத்துக்கள் முடக்கப்பட்டன. அது தொடர்பான அமலாக்கத்துறை கடிதங்களுக்கு சசிகலா பதிலளிக்காத நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.