மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல பிரபலங்கள் தங்களது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.
ஆனால், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ஒரு வருடத்திற்கு பின் திரையரங்கில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.