அடிக்கடி உணவுடன் மீனை சேர்த்துக் கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
மீன் பிடிக்காதவர்கள் என்பவர்கள் இருக்கவே முடியாது. மீன் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் அளவுக்கு மீறினால் அதுவும் நஞ்சுதான்.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
அடிக்கடி நாம் இதை சாப்பிடுவதால் நம் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிக அளவில் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். இந்த அமிலம் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். பொரித்த மீன்களை தவிர்த்து குழம்பை மீன்களை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
மீனை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தீமை விளைவிக்கும். மீனை எடுத்துக் கொள்ளும்போது சில கெட்ட கொழுப்புகளும் உடலுக்குள் செல்வதால் ஆஸ்துமா, குடல் கட்டி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுகின்றது. பொதுவாக ஏற்றுமதி செய்யக்கூடிய மீன்களை தான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுறா ஆகியவற்றில் தான் அதிகம் நச்சுத்தன்மை இருக்குமாம். அளவோடு உட்கொண்டால் நன்மைபயக்கும். அதுவே அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்துதான் விளையும்.