பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.
ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் இஸ்லாமாபாத் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை சமாதானம் பேச சவுதி அரேபியாவுக்கு அனுப்பியது. ஆனால் சவூதி விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அழகிய பசுமை வாய்ந்த பூங்காவான 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள F9 பூங்காவை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் அடமானம் வைக்க உள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.