Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்”… திறந்து வைத்தார் முதல்வர்….!!

ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் ஒன்றாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாங்கள் தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம். அந்த நன்றி உணர்விற்கு எடுத்துக்காட்டு தான் இந்த நினைவிடம் திறப்பு விழா எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |