உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வர இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என சிங்கப்பூர் அமைச்சர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வர இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் வாங் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.