Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்க – முதல்வருக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் வன்முறை வெடித்தது. போராட்டகுழுக்களுக்கும் சமூக விரோதிகள் நுழைந்து விட்டதாக போராடும் விவசாய சங்கங்கள் கருது தெரிவித்தன. இதனியிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக அரசு அதனை நியாயப்படுத்தி பேசி இருப்பதாகவும்  குற்றம் சாட்டியுள்ள முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |