கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கிய வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஷ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.