கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் முதல் உயிரிழப்பு வரை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை கடந்த வார நிலவரப்படி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 42 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று அதே மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இந்த தகவலானது பைசர் மற்றும் மாடெர்னா என்ற இரண்டு நிறுவனங்கள் தயாரித்த தடுப்புசிகளுக்கு மட்டும் பொருந்தும். இந்நிலையில் தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட 42 பேரில் 26 பேருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. 16 பேருக்கு தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டு உயிரிழந்த 5 பேருமே 84 வயதில் இருந்து 92 வயதிற்குட்பட்டவர்கள். அதோடு உயிரிழந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.