Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதுக்குடா..! இப்படி பண்ணுற ? மகன் செயலை கண்டித்த தாய்… திருவாரூர் சம்பவத்தில் போலீஸ் வழக்கு …!!

பெற்ற தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மது போதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது தாயான அனுசியா மகாலிங்கத்தை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மகாலிங்கம் அவரது தாயை கீழே தள்ளி விட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அக்கம்பக்கத்தினர் அனுஷியாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |