கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது மாணவன் பாடத்தை மனப்பாடம் செய்ததன் காரணமாக ஆசிரியர் ஆத்திரத்தில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.