Categories
உலக செய்திகள்

இந்தாங்க…! உங்களுக்கு 5,00,000…. இலங்கைக்கு இந்தியா பரிசு… உலகளவில் 8ஆவது நாடு ..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு பரிசாக அனுப்பப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, வரும் ஜனவரி 27ஆம் தேதி தடுப்பூசிகள் அனைத்தும் இலங்கைக்கு வந்து சேரும்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வர உள்ளது.

ஜனவரி 16ம் தேதியிலிருந்து இதுவரை பூட்டானுக்கு 150,000 டோஸ், மாலத்தீவுக்கு 100,000 டோஸ், நேபாளத்திற்கு 1 மில்லியன் டோஸ், பங்களாதேஷுக்கு 2 மில்லியன் டோஸ், மியான்மர்க்கு 1.5 மில்லியன் டோஸ், சீஷெல்ஸ்க்கு  50,000 டோஸ் மற்றும் மொரீஷியஸுக்கு 100,000 டோஸ்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. நோய்த்தடுப்பு திட்டத்தை தொடங்கியதிலிருந்து இந்தியா இதுவரை 7 நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை பரிசாக வழங்கி வருகிறது. அந்த வரிசையில் எட்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |