கோவை மாவட்டம் சில பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முக்கிய மாவட்டங்கள் சில பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருமாறியது. தற்போது கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்ன கல்லாறு, சின்கோனா, ஆனைமலை மற்றும் சோலையாறு பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் நேரத்தில் ஆவது தங்களது நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என பொள்ளாச்சி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.