முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக ஆட்சியில் இல்லாத எந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடல. அதற்கு உதாரணம் தான் ஒன்றிணைவோம் வா என்ற அற்புதமான திட்டம். அதைத்தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நம்முடைய கழக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் கிராமத்திலிருந்து நகரம் வரை தொடர்ந்து நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
நாம் 10,600 தான் நடத்த திட்டமிட்டோம். ஆனால் தாண்டி 21,000 கிராமம் வார்டுகள் மூலமாக சுமார் 1.25 கோடி மக்கள் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று சூழல் எடுத்துத்து தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதை எதைக் காட்டுகிறது என்றால் ? அதிமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு உடனடியாக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தை நாங்கள் வெளிப்படையாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
மக்களை நோக்கிய என்னுடைய பயணம் வருகிற 29-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என இந்த பயணத்திற்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. நான் திருவண்ணாமலையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ளடக்கிய மக்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.