இந்தியா உண்மையான நண்பன் என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகள் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம் ஆகியவற்றிற்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இச்செயலை அமெரிக்கா பாராட்டியுள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சகம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், இந்தியா உலக சுகாதார மேம்பாட்டிற்காக சர்வதேச நாடுகளுக்கு லட்சக்கணக்கான கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகிறது. குறிப்பாக மாலத்தீவு வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாகவும் தடுப்பூசி வழங்கி உண்மையான நண்பன் என இந்தியா நிரூபித்துள்ளது என்று பாராட்டி பதிவிட்டுள்ளனர்.