சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியின் போது, ஒரு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் இருந்த சீரம் நிறுவனத் தலைவர் ஆதர் பூனவாலா நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா தடுப்பூசி மருந்திற்கு இந்த தீ விபத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதாவது தீ விபத்து நடைபெற்ற கட்டிடமான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பாதிப்பானது தவிர்க்கப்பட்டது. ஆனால் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் ரோட்டா வைரஸ் தடுப்பூசி மருந்துகளும், காசநோய் தடுப்பூசி மருந்துகளும் சேதம் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.