Categories
லைப் ஸ்டைல்

கல்லையும் கரைக்கும் சுரைக்காய்… மிக அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

நம் பகுதியில் எப்போதும் விலை குறைவாக கிடைக்கும் சுரைக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. இவை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். சுரைக்காய்க்கு கல்லையும் ஜீரணிக்கும் சக்தி உண்டு என்பார்கள்.

சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும். அதோடு சிறுநீரகப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கும். சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். அதேபோல் உடலில் எரிச்சல், அரிப்பு இருப்பவர்கள் இதன் தோலை சீவி அந்தப் பகுதியில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

Categories

Tech |