சென்னையில் நாளை முதல் குடிநீர் வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்த தண்ணீர் லாரிகள் நாளை முதல் இயங்காது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவித்துள்ளது.