Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதியில் கோடி கோடியாய் குவிந்த பணம்…. பெரும் ஆச்சர்யம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கோடி கோடியாய் நன்கொடை கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நன்கொடையை வாரி வழங்குவது உண்டு. இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களும் நன்கொடைகளை வாரி வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தன்னுடைய மனைவியோடு திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ட்ரஸ்ட் (SVBC) பயன்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தங்களுக்கு வரும் விளம்பரங்களை நிறுத்திக் கொள்ள முடிவு செய்த நிலையில், இந்த டிரஸ்டுக்கு பலரும் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளதால் கடந்த மூன்று நான்கு மாதங்களில் SVBC டிரஸ்ட்க்கு ரூ.14.5 கோடி பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |