பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு 50 காலிபர் துப்பாக்கி, ஒரு எம் 14 துப்பாக்கி, ஒரு ஒளி தானியங்கி துப்பாக்கி, 22 காலிபர் துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.