தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் தன் உடலை கட்டமைப்போடு வைத்திருப்பதற்காக தமன்னா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது உடற்பயிற்சி வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தமன்னா சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அதில் உச்சபட்ச உடற்பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தாமல் இரண்டு மாதம் சாதாரண பயிற்சி மேற்கொண்டால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம் எனக் கூறியுள்ளார். அதோடு தன்னைப் போல் தினமும் உடற்பயிற்சி செய்து பழைய நிலைக்கு திரும்பலாம் என அறிவுறுத்தியுள்ளார்.