Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா…? காவலரிடம் தகராறில் ஈடுபட்ட நடிகர்… குடியிருப்பில் பரபரப்பு…!!

நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு  காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை சத்தம் கேட்டது. இதனை அவரிடம் கூறுவதற்காக மாடிக்கு சென்றபோது அவர்கள் அறையின் கதவை திறக்கவில்லை.

மேலும் நேரம் கடந்து செல்ல செல்ல அவர்களின் இசையின் சத்தமும் அதிகமானதால் செக்யூரிட்டியிடம் கூறினேன். அவர் சென்று கூறிய போதும் அவர்கள் இசையை நிறுத்தவில்லை. இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். மேலும் மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு குடியிருப்பாளர் இரண்டாவது மாடியில் இருந்து சத்தம் அதிகமாக வந்ததால் காவல்துறையை அழைத்துள்ளார். இதனால் 2 காவலர்கள் அங்கு வந்தனர். அவர்களுடன் நான் மாடிக்கு சென்று பார்த்தபோது குடித்துக்கொண்டிருந்த விஷ்ணுவிஷால் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

மேலும் அவர் காவல்துறையினரிடம் அவரின் செல்வாக்கை குறித்து பேசினார். காவல்துறையினர் முன்பு அவர் கூறியது, என்னை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் போல் இருந்தது. மேலும் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு தரும் விதமாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் புத்தாண்டு பண்டிகையின் போதும் அவர்கள் பார்ட்டி நடத்தியதை எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம். அதற்கு பின்பு அதனை நிறுத்திவிட்ட்டார்கள். எனினும் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனக்கு பேரக்குழந்தையும் உள்ளது.

இவர்கள் இவ்வாறு தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் நடு இரவில் முகம் தெரியாத நபர்கள் வருவதினால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம். மேலும் குடியிருப்பில் பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்றவற்றிற்கான வீடியோ ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. இவரால் எங்களை போன்று பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது. எங்களின் இந்த புகாரை உணர்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |