Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அப்பா, அம்மா துரத்திட்டாங்க… பாட்டியுடன் சுற்றிய இளம்பெண்… வேலூரில் பரபரப்பு…!!

ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் நீங்கள் யார் என்று வினவியதற்கு அந்தப் பெண் ஆங்கிலத்தில் சரளமாக பேசி, தங்களுக்கு யாரும் இல்லை என்றும், சிகிச்சைக்காக இங்கு வந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அந்த மூதாட்டியையும், இளம்பெண்ணையும் மீட்குமாறு கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து, அங்கு சென்று சமூகநலத்துறை அதிகாரிகள் அவர்களை ஒரு கடையின் முன்பு மீட்டனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் வசித்து வரும் லக்னபாய் என்றும், அவருடைய பேத்தி தேஜாஸ்ரீ என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அந்த இளம்பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக அவருடைய அம்மா, அப்பா உடல்நிலை சரியில்லாத பாட்டியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதால், அவருடன் சேர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்ததாக அந்த இளம்பெண் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அவர்களது உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அப்பகுதியிலேயே இருப்பதாக கூறி, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் இருவரையும் வாலாஜா அரசு மன நல மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேலும் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |