பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி சாதனை செய்தது. அதோடு இவர் பாரத், பாகி 2 போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சல்மான்கான் ஜோடியாக பிரபு தேவா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ராதே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் திஷா பதானியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டி இருக்கிறார். இதேபோன்று கொலை திஷா பதானியை செய்யப்போவதாக காவல் நிலையத்திற்கும் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். அந்த நம்பரை வைத்து போலீசார் விசாரித்தபோது, அது பாகிஸ்தானில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.