Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ள வந்துட்டா அடிச்சுரு…! தொட்டால் நடு கடலில் சிதறிடுவ… சீமான் கட்டமான பேச்சு ..!!

ஒருநாள் ஆட்சி அதிகாரம் என் கையில் கிடைக்கும் போதும் என் மீனவனை தொட்டால் கடலில் சிதறிடுவ என சீமான் எச்சரித்துள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இன்றைக்கு தமிழ் மக்களுக்கு என்று நாம் தமிழர் என்ற ஒரு வலிமையான புரட்சிகர படை உருவாகிவிட்டது. நீங்கள் வேறு மாநிலத்தில் எங்கள் தாய்மொழி அளித்தீர்கள் என்றால்,  நான் எங்கள் மாநிலத்தில் உள்ள உங்கள் தாய் மொழியை அழிப்பேன். இன்று என்னால் கண்டன அறிக்கை தான் கொடுக்க முடிகின்றது.

எங்கள் மீனவனை நீ மறுபடியும் கொன்று விட்டாய், நான் அதிகாரத்தில் உட்கார்ந்தபோது நீ இதேமாதிரி கிடப்பாய். நான் சொன்னதெல்லாம் நடந்துள்ளது. தண்ணிக்கு தெருவில் நின்று, சோத்துக்கு பிச்சை எடுப்பேம் சொல்லிக்கிட்டே இருந்தேன். இன்று இதெல்லாம் நடந்துட்டு தான் இருக்கு. அதே மாதிரி ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவேன். நெய்தல் படை என்று ஒரு படையை கட்டுவேன். அந்த படையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் நான் பேசுவேன்.

இனி எவனாவது ஒருவன் என் மீனவனை தொட்டால் நடுக்கடலில சிதறி விடுவாய் என்று சொல்லுவேன்.அவர்களுக்கு சிறந்த பயிற்சியை கொடுப்பேன். தரம் வாய்ந்த கருவிகளை கையில் கொடுப்பேன். எல்லைக்குள் வந்தால் அடிடா என்று சொல்வேன். என் ஆத்தா தாலி அறுக்க பார்த்துக் கொண்டிருப்பவன் நாங்கள் அல்ல என சீமான் ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |