மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கற்பித்தல் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி கற்பித்தல் பயனுள்ளதாக இருந்ததா? என்பதை அறிய இணைய வழி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தொடங்கிய தேர்வு, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு மூலம் எந்தெந்த பாடங்களில் அவர்களுக்கு பயிற்சி தேவை என்பதை அறிந்து மீண்டும் வகுப்பில் அந்த பாடங்கள் நடத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.