Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் வழி தனி வழி…! யாரு இடமும் தேவையில்லை…. தோனிக்கு டப் கொடுத்த ரிசப் பண்ட் …!!

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் சமூக ஊடகங்களில் ரிஷப் பண்ட் தான் டோனியின் இடத்தை  நிரப்புவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் ரிஷப் பண்ட் 97 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் இந்திய அணி டிரா செய்வதற்கு உதவியாக இருந்தார். எனவே சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை ரிசப் பண்ட் வெளிப்படுத்தி வருவதால் சமூக வலைதளங்களில் டோனியுடன் அவரை ஒப்பிட்டு பாராட்டுவது அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியா திரும்பிய ரிசப் பண்ட்டிடம் , இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “என்னை டோனியுடன் ஒப்பிடுவது ஆச்சர்யமானது. ஆனால் என்னை எவருடனும் ஒப்பிட நான் விரும்பமாட்டேன். மேலும் எனக்கென ஒரு தனி இடத்தை இந்திய அணியில் உருவாக்க விரும்புகிறேன். மேலும் ஒரு இளம் வீரரை ஜாம்பவான் உடன் ஒப்பிடுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |