பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை ,மாயா ,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து ஆரி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவோடு டைட்டிலை வென்றார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் நடிக்கும் புதிய படத்தை புதுமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்குகிறார் . இந்த படத்தில் ஆரி முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இளம் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் என்ற படத்தில் அப்பாணி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றதால் இவரை அப்பாணி சரத் என்று அழைப்பர் . மேலும் இவர் தமிழில் செக்கச்சிவந்த வானம் ,சண்டைக்கோழி 2 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .