Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி – 35வேட்பாளர்கள் அறிவிப்பு ….!!

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் ஒருங்கிணைந்த சோழ மாவட்டத்திலுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்த தாங்கள் வெற்றி பெற்றால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் ? மக்களிடம் எது போன்ற செயல்பாடுகளை சென்றடையவேண்டும் ? தேர்தலில் எதுபோன்ற வியூகம் அமைக்க வேண்டும் ? உள்ளிட்ட வாக்குறுதி குறித்து ஒவ்வொரு வேட்பாளர்களாக தொடர்ந்து பேசினார்கள்.

தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்களை அறிவித்து விட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய போவதாகவும் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் உடைய அறிமுக கூட்டம் தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக 35 வேட்பாளர்களை அறிவித்து  பேசிய சீமான், தங்களிடம் போதிய அளவிற்கு பணவசதி இல்லை. பொருளாதார வசதி இல்லாத சூழலில் விரைவில் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டுமென்றால் முன் கூட்டியே வேட்பாளர் யார் ? என்று அறிவித்தால் தான் அனைத்து வேட்பாளர்களும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை சந்திக்க முடியும். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது முன்கூட்டியே அவர்களுக்கு தெரியும் அதனால்தான் முன்கூட்டியே தாங்கள் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

Categories

Tech |