உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் நான்கு மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்களின் படகில் மோதி விட்டு சென்றுள்ளனர். இதனால் படகின் பின்பக்கம் ஓட்டை விழுந்து தண்ணீர் படகினுள் புகுந்து நான்கு மீனவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறையினர் 3 விசைப்படகுகளுடன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 4 மீனவர்களையும் சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும், மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.