Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை வரமாக கிடைக்கும்… இளநீரில் இத்தனை நன்மைகளா ? எவ்ளோ நாள்… இது தெரியாம போச்சே..!!

கோடை காலத்திற்கு இதமாக, கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானத்திற்கு பதிலாக, இயற்கை வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
ஏனெனில் மற்ற பழங்களின் மூலம் தயாரித்த ஜூஸ்களை விட, நிறைய சத்துக்களைகொண்டது தான் இளநீர்.  இந்த இளநீரை குடிக்கும் போது அதிகஇனிப்பாகவும், வித்தியாசமான சுவையிலும் நிறைந்திருக்கும்.

இப்படிப்பட்ட இளநீரை நாள்தோறும் குடித்து வருவதன் மூலம், இதனால் உடம்பிற்கு கிடைக்கும் நிறைய நன்மைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

உடல் வறட்சியைத் தடுக்கிறது: 
இளநீரை வெயில் காலத்தில் குடித்து வருவதால், இதில் உள்ள எலக்ரோலைட்டு என்ற சத்துக்கள், கனிமச்சத்துக்கள் போன்ற அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள  நீர்ச்சத்துகளின் அளவை சீராக பராமரித்து உடம்பில் உள்ள வறட்சியை  தடுக்கவும் உதவுகிறது.
சிறந்த ஆற்றல் நிறைந்த பானம்: 
கடைகளில் வாங்கப்படும்  கார்போனேட்டால் நிறைந்த பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் இளநீரை வாங்கிக் குடிப்பதால், உடம்பில் உள்ள ஆற்றல் ஊக்குவிப்பதோடு, எனர்ஜியையும் தருகிறது. மேலும் இதில் கலோரிகளின் அளவு குறைந்தளவும், கனிமச்சத்துக்கள் அதிகமஅளவும் இதில் நிறைந்திருப்பதால், உடம்பிற்கு தேவையான வேண்டிய அணைத்து ஆற்றலையும் இளநீரானது வழங்குகிறது.
இதயத்திற்கு ஏற்றது: 
இளநீரில் அதிகளவு கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகளவு உள்ளதால் இது இரத்த அழுத்தத்தின் அளவையும்  கட்டுக்குள்  வைக்க உதவுகிறது.
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்:
இளநீரில் மக்னீசியம்,பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த சத்துக்களானது டையூரிக் ஏஜென்ட்டாக செயல்பட்டு, சிறுநீரகத்தை சுறுசுறுப்பாக வைக்க உதவுவதுடன்,ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. மேலும் நாள்தோறும் இளநீரை பருகுவதால், இது  சிறுநீரகத்தில் உள்ள கற்களை எளிதில் வெளியேற்றிவிட உதவுகிறது.
உடல் வெப்பம் தணிக்க உதவும்: 
கோடை காலத்தில் அதிகளவு சூரியக்கதிர்களின் தாக்கம் ஏற்படுவதால், இது நம் உடம்பில் படுவதால், உடலின்  வெப்பநிலையை அதிகரித்து, கடுமையான வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல் அம்மை நோய், போன்றவை உருவாக்குவதால், இதை எளிதில் குணபடுத்த இந்த இளநீரை குடிப்பதன் மூலம் குணபடுத்த முடியும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது:
தினமும் இளநீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து, நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

Categories

Tech |