சசிகலா அடுத்த 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குனர் மனோஜ் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது: “சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார். எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அவர் இருப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கண்காணிப்புக் குழுவில் சசிகலா வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நோயாளி அல்ல என்றும்” அவர் விளக்கமளித்துள்ளார்.