Categories
அரசியல்

சொந்த அண்ணனை கண்டுக்கல…! நிச்சயமாக திமுக உடையும்… முதல்வர் பேச்சால் புலம்பும் திமுக …!!

முக அழகிரியால் திமுக உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார்.

திமுக கட்சியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முக அழகிரி நீக்கப்பட்டார். ஆனால் அவரது பெயர் இன்னும் அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்திய அழகிரி ஸ்டாலினால் நிச்சயம் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்தார்.அதற்கு முன் சென்னைக்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முக அழகிரி சந்திப்பார் என்ற தகவல் கசிந்தது.

அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் முக அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான கே.பி.ராமலிங்கம்,அமித்ஷாவின் வருகையின்போது பாஜகவில் இணைந்தார். அதன்பின் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி ஆனபிறகு அழகிரி-ரஜினிகாந்த் சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் செய்தியாகவே கடந்தது. கருணாநிதி மறைவுக்கு பின்னர் அழகிரி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான செயல்பாடுகளில் அவர் ஈடுபடவில்லை.திமுகவில் இருந்து அழகிரியைப் பற்றி ஒருவர் கூட வெளிப்படையாக பேசுவதில்லை.

இந்நிலையில் தற்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அழகிரியைப் பற்றி பேசி வருகிறார். அவர் கூறியிருப்பதாவது, சசிகலாவின் வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதிலடியாக நான் கூறுகிறேன், முக அழகிரியால் திமுக உடையும். சொந்த அண்ணனுக்கு இப்படி செய்த ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார் என்று தொடர்ந்து திமுகவின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார்.

Categories

Tech |